முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக இன்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், குறித்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் இந்த நினைவுக் கல் நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.