இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது.
அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 43 ஆயிரத்து 288 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 40 இலட்சத்து 46 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 37 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 999 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.