கடந்த 25 வருடங்களாக இம்ரான் கான் போராடியது பாகிஸ்தானியர்கள் ஒவ்வொருவரையும்1,75,000 ரூபாய் கடனுக்கு தள்ளுவதற்காகுமென மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த அறிக்கையில் பி.பி.பி.தலைவர் பிலாவால் மேலும் கூறியுள்ளதாவது, ‘பி.டி.ஐ.அரசாங்கம் தன்னம்பிக்கை மற்றும் பாக்கிஸ்தானை கடன் வலையில் இருந்து விடுவித்தல் என்ற பொய்யான மோசமான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றது.
ஆனால் இதுவரை 33 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு கடன்களை கடன் வாங்கியுள்ளார் என்று த நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இந்த கடன்களுக்கான வட்டி அதிகரித்து வருவதால், அரசாங்கத்தின் சம்பளத்தை செலுத்திய பின்னர் பாதுகாப்பைத் தவிர்த்து, வளர்ச்சிக்கு பாகிஸ்தானுக்கு எதுவும் மிச்சமில்லை.
மின் துறையில் வட்டக் கடன் மட்டும் 2.5 டிரில்லியன் டொலர்களாகவும் எரிவாயு துறையில் ருபாய்.350 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ருபாய்710 பில்லியன் வரிகளை திருப்பித் தராததன் ஊடாக பி.டி.ஐ ஒரு புதிய வட்டக் கடனை உருவாக்கியுள்ளது’ என்று அவர் குற்றம் சுமத்தினார்.