பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் கோரிக்கைக்கு மத்தியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அதன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை குழுவிற்கு இராணுவ நடவடிக்கை குறித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் காணப்படுகின்றது.
விரோதப் போக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியான வன்முறைகள் இஸ்ரேலை ஒரு பரந்த மோதலுக்கு இட்டுசெல்லும் என்றும் இதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் தரைவழி தாக்குதலுக்கான ஆபத்து உள்ளது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.