இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வெளித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவில் ஹமாஸின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர் யஹியா சின்வார் கான்னை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் ஒரே இரவில் நடத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 ல் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சின்வாரின் வீடு மற்றும் அவரது சகோதரர் மொஹமட் ஆகியோரின் வீடு “பயங்கரவாத உள்கட்டமைப்பாக” பயன்படுத்தப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறியது.
அத்தோடு இந்த தாக்குதலில் இளம்பெண் உட்பட காசாவின் அல்ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.