போக்குவரத்தை எளிதாக்க கூடுதல் பேருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ரயில்வே தொழிற்சங்கங்களின் திடீர் பணிப்புறக்கணிப்பையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
தங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சங்கங்கள் இன்று காலை முதல் திடீரென நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன் விளைவாக, ரயில் சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே மேலதிக பேருந்துகளை சேவையில் இணைத்ததாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இவ்வாறு திடீரென பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் பொதுமக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு செல்ல இது சரியான நேரம் அல்ல என்றும் அமுனுகம கூறினார்.
எனவே, இன்று காலை முதல் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக அதிக பேருந்துகளை இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்