கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
இந்த ஆண்டு இதுவரை இலங்கை முழுவதிலும் மொத்தம் 7,317 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.