கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) இதற்கான முதற்கட்ட விநியோகத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்ட இந்த மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இந்த மருந்து இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
திரவ வடிவில் இல்லாம் பவுடர் ( powder) வடிவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த மருந்தை சாதாரண தண்ணீரில் கலந்து குடிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும்,இந்த மருந்தை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.