அரபிக்கடலில் உருவாகி வலுப்பெற்ற டாக்தே புயல் நள்ளிரவில் கரையை கடந்துள்ளது.
இதன்போது 185 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததுடன், கனமழை பெய்துள்ளது.
அத்துடன் பல இடங்களில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் தங்களது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.