எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் வறுமை, மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்த தெரிவித்துள்ள அவர், ‘ டைக்ரே பிராந்தியத்தில் மிகவும் கொடூரமான நிலை நிலவுவதாக விவரித்துள்ளார்.
ஏறக்குறைகய 5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 91 வீதமானோருக்கு உணவுத்தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் ஊடச்சத்து மற்றும் பசியின் கொடுமையால் பல மக்கள் இறக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.