இந்தியன் கொவிட்-19 மறுபாடு குறித்த கவலைகளுக்கு இடையே வார இறுதியில் 6,200க்கும் மேற்பட்டவர்களுக்கு போல்டனில் தடுப்பூசி போடப்பட்டது.
ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இந்த நகரம் தொற்றுநோய்களின் கூர்மையான அதிகரிப்பைக் கண்டது மற்றும் பி.1.617.2 மாறுபாடு இப்போது புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை.
முன்னதாக அதிக முன்னுரிமை குழுக்களில் சுமார் 10,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
மே 11ஆம் திகதி முதல் ஏழு நாட்களில் கொவிட்-19 இன் 733 புதிய தொற்றுகளை போல்டன் பதிவு செய்துள்ளது. இது பிரித்தானியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன.