கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் உண்மையான தாக்கம் இலங்கையில் இரண்டு வாரங்களில் உணரப்படும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அண்மையில் விதிக்கப்பட்ட பயணத் தடை இலங்கையில் தொற்றைக் குறைக்க உதவவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக பயணத் தடையின் போது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சோதனைகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே காணப்பட்டதாகவும் அச்சங்கத்தின் தலைவர் பாலசூரிய தெரிவித்தார்.
அந்தவகையில் வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனைகள் குறைவாக இருப்பதால் அடுத்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இலங்கையின் உண்மையான கொரோனா தொற்று நிலைமை அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் மட்டுமே வெளிப்படும் என்றும் பாலசூரிய குறிப்பிட்டார்.