கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானங்கள் மற்றும் திருத்தங்களுக்கு உடன்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இதற்கு நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நினைவேற்ற முடியும் என்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு அவசியம் என்ற செய்திகள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அவசியம் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் இன்று அறிவித்திருந்தார்.
62 பக்கங்களை கொண்ட கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் பொதுவாக்கெடுப்பு (referendum) என்பது உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.