நாட்டில் இன்று ஒரேநாளில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவே, நாட்டில் பதிவான ஒரேநாளில் அதிக உயிரிழப்பாகும்.
இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் ஆயிரத்து 15ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு அதிகம் பதிவாகிய நாடுகள் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்தில் உள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை ஆறு இலட்சம் பேர் மரணித்துள்ளதுடன் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அந்நாடு வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இதற்கடுத்து, பிரெசிலில் நான்கு இலட்சத்து 35 ஆயிரம் பேரும் இந்தியாவில் இரண்டு இலட்சத்து 77 ஆயிரம் பேரும் மெக்சிகோவில் இரண்டு இலட்சத்து 20 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாடுகள், முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.