உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு நிபந்தனைகளின் பேரில் இஸ்ரேலின் இராணுவக் குழுவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக ஹமாஸின் மூத்த அதிகாரியும் முன்னாள் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் வைத்தியர் பாசெம் நெய்ம் தெரிவித்தார்.
அதன்படி, இஸ்ரேலிய படைகள் அல்-அஸ்கா வளாகத்திற்குள் நுழைவதை நிறுத்தி, அந்த இடத்தை மதிக்க வேண்டும் என்றும் இரண்டாவதாக ஷேக் ஜரா சுற்றுப்புறத்தில் உள்ள பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனர்களுக்கும் இஷ்ரேலுக்கும் இடையிலான போரில் நேற்றுடன் முடிவடைந்த கடந்த 10 நாட்களில் மட்டும் 60 குழந்தைகள் உட்பட 220 பாலஸ்தீனர்களும் 22 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நார்வே அகதிகள் சபையின் பொதுச் செயலாளர் குழந்தைகள் உயிரிழப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின்தாக்குதலால் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு உள்ளாவதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் அரசு, தளபதிகள் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட போராளி இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.