அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அர்ஜெண்டீனாவில் 30இலட்சத்து ஒன்பதாயிரத்து 150பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை 34இலட்சத்து 11ஆயிரத்து 160பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72ஆயிரத்து 265பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 39ஆயிரத்து 652பேர் பாதிப்படைந்ததோடு 494பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 29ஆயிரத்து 745பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 877பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.