யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவரே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மின் தகனம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 1,089 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.