நுவரெலியா- நோர்வூட் பிரதேச சபையில் மேலும் 2 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரதேச சபையின் செயலாளர் மற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
அத்துடன் நோர்வூட் பிரதேச சபை தலைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 9 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 38பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.