கொழும்பில் உள்ள பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
கொழும்பு 07 இல் உள்ள செல்வந்தர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
நாளாந்தம் ஊதியம்பெறும் மக்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், அடுத்த வாரத்திற்குள் அரசாங்கம் நிலைமையை மதிப்பாய்வு செய்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறினார்.