கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய மாறுபாடு பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா தொற்றைவிட குறைந்த தாக்கம் கொண்டது என பிரித்தானிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பி .1.617.2 மாறுபாட்டிற்கு எதிராக 88% பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இதேவேளை கென்ட் மாறுபாட்டிற்கு எதிரான 66% செயற்திறனுடன் ஒப்பிடும்போது, அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டு அளவுகள் இந்திய மாறுபாட்டிக்கு எதிராக 60% பயனுள்ளதாக காணப்படுகின்றன.
இந்த தரவு புதுமையானது என்றும், அடுத்த மாதம் மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானிய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டங்களின்படி, மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை ஜூன் 21 முதல் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.