கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமித்துள்ளார்.
வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமா,வைத்தியர் ஹசிதா திசேரா மற்றும் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோர் அடங்கிய இந்த குழு, உலகில் எங்கெங்கும் உள்ள சர்வதேச மருந்து ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு ஏற்ப இதுபோன்ற தயாரிப்புகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை விசாரித்து விரைவில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி கொரோனா நோயைக் கட்டுப்படுத்த மருந்துகள், புதிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க சுகாதார அமைச்சு விரைவில் உத்தரவிடும் என்று சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.
கனடாவில் மருத்துவ ரீதியாக தயாரிக்கப்பட்ட இன்ஹேலர், தற்போது கிரேட் பிரிட்டனில் மருத்துவ தரத்தில் உள்ளது.
அத்துடன் கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட மருந்து போன்ற விடயங்கள் குறித்து இந்த குழுவிலிருந்து தெரிந்துக்கொள்ள அமைச்சு எதிர்பார்க்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.