ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனே தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்ககவை கடந்த புதன்கிழமை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் வஜிர அபேவர்தன கூறினார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த ஒரு ஆசனமும் கிடைக்கப்பெறவில்லை.
எனினும் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது.
அந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக பலரின் பெயர்கள் முன்னதாக முன்மொழியப்பட்ட நிலையில், அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக கட்சியின் செயற்குழு பல தடவைகள் கூடியது.
எனினும் அந்த சந்தர்ப்பங்களில் தேசிய பட்டியல் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.