தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை) முதல் விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் அரச போக்குவரத்து கழகங்களின் சார்பில் சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகளும் சென்னையில் இருந்து ஏனைய ஊர்களுக்கு 1500 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் இருந்த ஏராளமானோர், தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்குக் புறப்படும் பேருந்துகளின் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.