தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்மைய, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 12 ஆயிரத்து 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட விதிகளை மீறுபவர்களை கண்டறியும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.