பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 44 இலட்சத்து 60 ஆயிரத்து 446 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை மேலும் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 127 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை 42 இலட்சத்து 99 ஆயிரத்து 889 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் 32 ஆயிரத்து 841 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.