யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர்,அவருடன் தொடர்பினை பேணியவர்களை இனங்கண்ட சுகாதார பிரிவினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.
அதாவது மரணமானவரின் குடும்ப அங்கத்தினர், மரண சடங்கு கிரிகைகள் செய்த குருக்கள், அவருடைய உதவியாளர் உள்ளிட்ட 8 பேரை தனிமைப்படுத்தலுக்கு இதுவரை உட்படுத்தியுள்ளதுடன் ஏனையவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.