கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவரது மரணத்துடன் வவுனியா வைத்தியசாலையில் நேற்று மாத்திரம் இரண்டு கொரோனா நோயாளிகள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.