பிலிப்பைன்ஸில் 5.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.02 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
113 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய குறித்த நிலநடுக்கம் கியாம்பா உள்ளிட்ட பல நகரங்களிலும் உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.