இலங்கை வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளமை தற்போது சமூகத்தில் பெருமளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் அம்பாறையில் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதாக இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சமூகத்தில் இது தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த கருப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு 42 பேருக்கும் 2020ஆம் ஆண்டு 24 பேருக்கும் 2021ஆம் ஆண்டிள் இதுவரையில் 24 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவர்களில் எவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த நோய் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.