பிரித்தானியாவில் டிஜிட்டல் நுழைவு இசைவுகளை (விசா) வழங்கும் முறையை அமுல்படுத்தவுள்ளதாக உட்துறை செயலாளர் ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு விசா அல்லது குடியேற்ற அனுமதி இல்லாமல் வருவோர் எதிர்காலத்தில் மின்னணு பயண அங்கீகாரத்துக்கு (இடிஏ) விண்ணப்பிக்க வேண்டிவரும். இந்த நடைமுறை பிரிட்டனுக்கு வர விரும்புவோரின் விண்ணப்பங்களில் தகுதியானவற்றை முன்கூட்டியே தீர்மானிக்க உதவும்.
இந்த நடைமுறையின் கீழ் ஆண்டுதோறும் 30 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய மாற்றங்களில் பிரித்தானியாவின் எல்லைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் நடைமுறையும் அடங்கும். புதிய நடைமுறைகள் பிரித்தானியாவில் குடியேறுவோர், இங்கிருந்து இடம்பெயர்வோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட உதவும்.
பிரித்தானியாவின் குடியேற்றக் கொள்கையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் உட்துறை செயலாளர் ப்ரீத்தி படேல் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியாவுக்கு முழு டிஜிட்டல் செய்ய பிரித்தானிய உட்துறை அலுவலகம் நம்புகிறது.
ஏற்கெனவே அமெரிக்காவில் மின்னணு பயண அங்கீகார நடைமுறை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது