இந்திய கொவிட்-19 மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வெளியேயும் உள்ளேயும் பயணிக்க வேண்டாம் என்று அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
போல்டன், பிளாக்பர்ன், கிர்க்லீஸ், பெட்ஃபோர்ட், பர்ன்லி, லீசெஸ்டர், ஹவுன்ஸ்லோ மற்றும் நோர்த் டைன்சைட் ஆகிய இடங்களில் இந்திய கொவிட்-19 மாறுபாடு வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரேட்டர் மன்செஸ்டரில் உள்ள போல்டனில், கடந்த மே 20ஆம் திகதி முதல் வாரத்தில் 100,000 பேருக்கு 451 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது இங்கிலாந்தில் அதிகமாகும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உட்புற பகுதிகளுக்குள்ளும் சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட எட்டு பகுதிகளையும் உள்ளடக்குவதற்கு வழிகாட்டல் வெள்ளிக்கிழமை எந்தவொரு அரசாங்க அறிவிப்பும் இல்லாமல் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.