தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை செயலாளர் கோபால் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.