தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது குறித்து இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலகந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்.
குறித்த பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நகர்புறத்தை போன்று கிராமப்புறங்களிலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயற்படுத்த வேண்டும். தமிழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 296 வாகனங்கள் மூலம் 4 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.