பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமையானது ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் யாழில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறுபட்ட செயற்பாட்டினை இராணுவம் மூலம் முன்னெடுப்பதாகவும் எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது என்றும் பிரியந்த பெரேரா கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஏதாவது கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்.