யாஸ் புயல் இன்று (புதன்கிழமை) ஒடிசா மற்றம் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கவுள்ளது.
இதன்போது மணிக்கு 165 கிலோமீற்றர் முதல் 185 கிலோமீற்றர் வரையில் காற்று வீசும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதுடன், கடல் கொந்தளிப்பாக உள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளும் தயார் நிலையில், உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.