தனக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் விசாரணைகள் குறித்து சிறையில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி தெரிவித்துள்ளார்.
புலனாய்வாளரிடமிருந்து தனக்கு எதிரான வழக்குகள் குறித்து கடந்த திங்கட்கிழமை தான் அறிந்துகொண்டதாக அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு அமைப்பை நிறுவுதல், மனித உரிமைகளை மீறுதல் மற்றும் ஒரு நீதிபதியை அவமதிப்பது என தான் ஒவ்வொரு நாளும் மிகவும் கடினமான குற்றவாளியாகி வருவதாகவும் அலெக்ஸி நவல்னி குறிப்பிட்டுள்ளார்.
மோசடி வழக்கில் பரோல் மீறல் குற்றச்சாட்டினை அடிப்படையாகக் கொண்டு நவல்னி இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.