கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தியவர்களும் தொடர்ந்து பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு கனேடிய பொது சுகாதாரத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசி போட்டவர்கள் வைரஸை மற்றவர்களுக்கு எடுத்துச் சென்று பரப்ப முடியுமா என்பதை நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று குறித்த பொது சுகாதாரத் துறையின் அறிவிப்பு விளக்கியது.
இந்தக் காரணத்திற்காக, அவர்கள் தடுப்பூசி அளவைப் பெற்றார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், கனேடியர்கள் தற்போதைக்கு முகக்கவசம் அணிவது, நெருங்கிய தொடர்புகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் வழக்கமாக கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
கனடா தடுப்பூசிக்குப் பின் வாழ்க்கை அட்டவணையை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இது வந்துள்ளது.
அதிக கொவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு எட்டப்பட்டால் 2021ஆம் ஆண்டு கோடை மற்றும் இலையுதிர் காலம் எப்படி இருக்கும் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது.