இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 770 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 48 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 23 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அதேநேரம் ஒரேநாளில் 3 ஆயிரத்து 558 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 18 ஆயிரத்தை கடந்துள்ளது.