மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க அரசியல் ரீதியா முயற்சிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹுவர் நிறுவனத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா காரணமாக இந்தியா பல்வேறு நெருக்கடியை சந்தித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமுள்ள மக்களுக்கு பாரபட்சமின்றி இலவச உணவுப் பொருட்களும், வங்கிக் கணக்கில் நேரடியாக பணமும் வழங்கப்படுகின்றன.
ஆனாலும் மத்திய அரசை வேறு மாதிரியாக சித்தரிக்க அரசியல் ரீதியில் முயற்சிக்கப்படுகிறது. இது மத்திய அரசின் உண்மையான நிர்வாகம் குறித்து மதிப்பீடு செய்யும்போது புலப்படும்.
அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறோம். மதசார்பின்மை என்பது யாருடைய மத நம்பிக்கைக்கும், எதிராக இருக்கக் கூடாது. இந்திய மக்கள் ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.