உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் கொரோனா வைரஸ் தொற்றினால் 50ஆயிரத்து 76பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் இதுவரை 21இலட்சத்து 93ஆயிரத்து 367பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 509பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 183பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 373பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 20இலட்சத்து ஆறாயிரத்து 918பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.