மாலைத் தீவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மாலைத்தீவில் 60ஆயிரத்து 943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 106ஆவது நாடாக விளங்கும் மாலைத்தீவில் இதுவரை மொத்தமாக 151பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 299பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25ஆயிரத்து 427பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 35ஆயிரத்து 365பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.