தெஹிவளை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளிலும் புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில், இலங்கையில் 2,584 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த 2,584 பேரில், 429 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதாவது 51 பேர் தெஹிவளையைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர், மிரிஹானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் மீதமுள்ளவர்களில், பாதுக்கவைச் சேர்ந்த 51பேரும், நவகமுவ பகுதியைச் சேர்ந்த 34 பேரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 26 பேரும், பம்பலப்பிட்டியவைச் சேர்ந்த 14 பேரும் அடங்குகின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தைத் தவிர, கம்பாஹா மாவட்டத்தில் 415 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 356 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வைரஸுடன் தொடர்புடைய மேலும் 27 மரணங்கள் நேற்று (புதன்கிழமை) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.