இங்கிலாந்தில் உள்ள அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு ‘நாங்கள் இன்னமும் காத்திருக்க வேண்டியிருக்கும்’ என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை தாமதப்படுத்த வேண்டும் என அரசாங்கம் பரிந்துரைக்க தற்போது தரவுகளில் எதுவும் காணவில்லை எனவும் ஆனால், இந்திய மாறுபாட்டின் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக அவர் கூறினார்.
வியாழக்கிழமை, இங்கிலாந்தில் மேலும் 3,542 கொரோனா வைரஸ் தொற்றுகளும், 28 நாட்களுக்குள் 10 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த ஏழு நாட்களில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது தொற்றுகள் 20.5 சதவீதம் அதிகரித்துள்ளன.
முன்னதாக இங்கிலாந்தில் உள்ள அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் ஜூன் 21ஆம் திகதி தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.