நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அம்மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 160பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய நுவரெலியாவில் இதுவரை 3.897 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் 45 பேர் குறித்த மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பி.சி.ஆர்.பரிசோதனையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.