12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் (ஈ.எம்.ஏ) அனுமதி வழங்கியுள்ளது.
தனிப்பட்ட உறுப்பு நாடுகள் இப்போது சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குமா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் இதற்கு ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவும் கனடாவும் இந்த மாத தொடக்கத்தில் இளம் பருவத்தினருக்கான ஃபைஸர் தடுப்பூசியை அங்கீகரித்தன.
ஐரோப்பா தனது தடுப்பூசி தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (றுர்ழு) கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறைந்தது 70 சதவீத மக்கள் தடுப்பூசி போடும் வரை தொற்றுநோய் நீங்காது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளார்.