இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது.
இந்த உதவி கொழும்பு, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 7,500 பேருக்கு உதவும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்கவும் தற்போது தற்காலிக இடங்களில் வசித்து வருபவர்களும் இந்த நிதி உதவி பயனளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீரிழிவு நோய் பரவுவதைத் தவிர்ப்பதற்காக சுகாதார விழிப்புணர்வு அமர்வுகளுடன் முதலுதவி மற்றும் மருத்துவ சேவைகளும் வழங்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேரழிவு நிவாரண அவசர நிதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.