ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு எதிரான மற்றொரு வழக்கில் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மற்றொரு வழக்கின் இறுதி விசாரணையில் ஜிம்மி லாய் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையையும் சேர்த்து ஜிம்மி லாய் மொத்தமாக 20 மாதங்கள் சிறையில் இருப்பார்.
ஹொங்கொங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் இயங்கும் அப்பிள் டெய்லி என்கிற பத்திரிக்கையின் உரிமையாளரான ஜிம்மி லாய், இந்த பத்திரிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், கட்டுரைகளும், செய்திகளும் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், சீன அரசாங்கத்துக்கு எதிராக நடந்த சட்டவிரோதப் போராட்டங்களை ஒருங்கிணைத்து மற்றும் அதில் பங்கேற்ற குற்றச்சாட்டில் ஜிம்மி லாய் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் ஜிம்மி லாய்க்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.