கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (சனிக்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த 26ம் திகதி, 86 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்தே குறித்த பகுதிகளுக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பகுதிகளில் இதுவரை 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.