இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பான சுற்றிவளைப்புகளின் அடிப்படையில், இதுவரையில் 17 ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதேநேரம் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிஇ வீதிகளில் பயணித்த 20 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14 மாத காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையானவர்கள் கைதான சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.