கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக குண்டசாலை மற்றும் மெனிகின்ன அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆகவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டியில் தொடங்கிய தடுப்பூசி திட்டத்தில், குறித்த பகுதிகளிலுள்ள மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும், அதிக ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்படுவதாகவும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகின்றமையை அவர் மறுத்துள்ளதுடன், உற்பத்தியாளர்களிடமிருந்து பல அளவு தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களில், ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.